எம்ஜிஆர் நகரில் புதிய அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளுடன் சென்று அடிக்கல் நாட்டினார் எம் எல் ஏ இளங்கோ.

எம்ஜிஆர் நகரில் புதிய அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளுடன் சென்று அடிக்கல் நாட்டினார் எம் எல் ஏ இளங்கோ.
எம்ஜிஆர் நகரில் புதிய அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளுடன் சென்று அடிக்கல் நாட்டினார் எம் எல் ஏ இளங்கோ. கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னம் ஊராட்சியில் , எம்ஜிஆர் நகரில் நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் சேர்ந்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி , க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏஇளங்கோ.
Next Story