கோவை: போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் உரை
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதையில்லா தமிழ்நாடு – 2025 திட்டத்தின் கீழ் கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பேரணிக்கு கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கல்லூரிகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதை மாணவர்கள் எதிர்த்து, தகவல்களை உரிய துறைகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
Next Story



