அன்னதானம் வழங்குவோர் முறையாக முன் அனுமதி பெற்று வழங்க வேண்டும்

X
சமீபகாலங்களில் நடைபெறும் அன்னதானத்தில் உணவருந்தும் மக்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுதல் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்பரவுதல் ஆகியவை பரவலாகக் காணப்படுவதாக ஊடகங்கள் வழியாக அறியப்படுகின்றது. உணவு ஒவ்வாமை தவிர்த்து, உணவு மூலம் பரவக்கூடிய தொற்று நோயானது பெரும்பாலும் உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பயன்படும் தண்ணீர் ஆகியவற்றால் தான் ஏற்படுகின்றது. எனவே, அன்ன தானங்களின் மூலம் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதவழிப்பாட்டுத்தளங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 07.06.2025 மற்றும் 09.06.2025 அன்று நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கல்விமடை என்ற கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தில் சாப்பிட்டவர்களில் சுமார் 150 பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விவகாரத்தை ஆய்வுசெய்து விசாரித்த உணவு பாதுகாப்புத் துறையினர், அன்னதானம் நடத்த உணவுபாதுகாப்புத் துறையின் முன்னனுமதி பெறவில்லை என்பதும், ஆழ்துளைகிணறு மூலம் பெறப்பட்ட சுத்திகரிக்கப்படாத மற்றும் குளோரின் கலக்காத தண்ணீரை சமையலுக்கும், நுகர்வோர்கள் அருந்துவதற்கும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. எனவே, பிரச்சினைக்குரிய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அந்தத் தண்ணீரில் வயிற்றுப போக்கினை ஏற்படுத்தும் கிருமி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறு வதைதடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பின்பற்றிட வேண்டும் எனஅறிவிக்கப்படுகின்றது.
Next Story

