ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் கிராம பகுதியில் அருந்ததியர் காலனி உள்ளது இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த அருந்ததியர் காலனி பகுதிக்கு செல்லும் வழியில் நீர் வழிபாதை உள்ளது இந்தப் பாதையில் மழைக்காலங்களில் தண்ணீரானது சுமார் 5 அடி உயரத்திற்கு செல்வதாகவும் இந்த தண்ணீரை கடந்துதான் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதும் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதும் அன்றாட பணிகளுக்கு சென்று வருவதாகவும் தங்கள் பகுதிக்கு நீரோடை மேல் பகுதியில் பாலம் கட்டித்தர அரசு அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் நீரோடை பகுதிகளில் புதர்கள் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் விஷ சந்துகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும் தாங்கள் உயிர் பயத்துடன் வாழ்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்திகுளம் அருந்ததியர் காலனி பொதுமக்கள் ஒன்று திரண்டு தங்கள் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் தங்கள் குழந்தைகளுடன் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஸ்டாலின் அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.சம்பவ இடத்திற்க்கு வந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லாததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க எழுத்தின் அடிப்படையில் உறுதி அளிக்க வேண்டும் என்று தங்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் முன்வைக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் காத்திருப்பு போராட்டம் கைவிட படாது என்று அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story