சிவகாசி அருகே பேருந்து படியில் பயணித்தபோது தவறி விழுந்து பலியான கல்லூரி மாணவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது.....

சிவகாசி அருகே பேருந்து படியில் பயணித்தபோது தவறி விழுந்து  பலியான கல்லூரி மாணவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது.....
X
சிவகாசி அருகே பேருந்து படியில் பயணித்தபோது தவறி விழுந்து பலியான கல்லூரி மாணவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது.....
சிவகாசி அருகே பேருந்து படியில் பயணித்தபோது தவறி விழுந்து பலியான கல்லூரி மாணவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது..... சிவகாசி சுப்ரமணியபுரம் காலனியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் ஆல்பர்ட் (வயது 18). இவர் சாத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு பயிற்று வருகிறார். கல்லூரி முடிந்து இன்று சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் தனியார் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக முன்பக்க படியில் தொங்கியபடி வந்துள்ளார். அனுப்பன்குளம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி படியிலிருந்து கீழே தவறி விழுந்த ஆல்பர்ட்டின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை மீட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த தனது மகனின் உடலை கண்டு "5 ஆண்டுகள் காத்திருந்து பெற்ற என் பிள்ளையை இப்படி பறி கொடுத்து விட்டேனே" என கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. மேலும் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் 47, என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story