யார் அந்த அதிகாரி? போஸ்டரால் பரபரப்பு

யார் அந்த அதிகாரி? போஸ்டரால் பரபரப்பு
X
இளைஞர் கொலை தொடர்பாக யார் அந்த அதிகாரி என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை நகரில் முக்கிய இடங்களான பேரூந்து நிலையம், அரண்மனை வாசல், கோர்ட் வாசல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த அதிகாரி? என்ற வாசகம்த்துடன் ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story