ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

X
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள நியாயவிலை கடைகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

