கவுன்சிலர் கூட்டத்தில் அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கவுன்சிலர் கூட்டத்தில் அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X
தேவகோட்டை கவுன்சிலர் கூட்டத்தில் அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், ஆணையாளர் கண்ணன் முன்னிலையில் நகர்மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக 22வது வார்டு கவுன்சிலர் கோமதி வீடு 27 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது. அவர் வீடு வரை உள்ள சாலை அமைப்பதற்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதுவரை ஒப்பந்ததாரர் சாலை அமைக்காமல் உள்ளதால் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென நகர மன்ற தலைவரிடம் வலியுறுத்தி ஒப்பந்ததாரர்களை கண்டித்து கூட்டத்திலிருந்து அமமுக நகரச் செயலாளரும் 6வது கவுன்சிலர் கமலக்கண்ணன், 4வது வார்டு விக்னேஸ்வரி மாரிமுத்து, 17வது வார்டு நித்யா குமார், 22 வது வார்டு கோமதி, 23 வது வார்டு தனலட்சுமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகரமன்ற தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Next Story