அஜித்குமார் கொலை வழக்கு - ஆட்டோ டிரைவர் பேட்டி

அஜித்குமார் கொலை வழக்கு - ஆட்டோ டிரைவர் பேட்டி
X
அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக ஆட்டோ டிரைவர் பேட்டியளித்துள்ளார்
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் நீதி விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் தெரிவித்ததாவது, கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வழக்கம் போல் பத்திரகாளியம்மன் கோவிலில் காத்திருந்த போது இந்து அறநிலையத்துறை ஊழியர் சக்தி தன்னை அழைத்ததாகவும், அங்கு அசைவற்று கிடந்த அஜித்குமாரை அங்கிருந்தவர்கள் துணையுடன் ஆட்டோவில் ஏற்றி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததாகவும், பின்னர் காவலர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க பத்து நிமிடம் காத்திருந்ததாகவும், அப்போது அஜித்குமார் இறந்துவிட்டதாக அவர்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் இதனை அடுத்து தான் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவித்தார். ஆட்டோவில் ஏற்றியபோது அஜித்குமார் மயங்கியிருந்தாரா, உயிரற்று இருந்தாரா என எனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். நீதி விசாரணையில் இவை அனைத்தையும் தெரிவித்ததாக ஆட்டோ டிரைவர் அய்யனார் கூறினார்
Next Story