தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு ஒன்றிய அரசு வரி விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கமாவட்டத் துணைத் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் ஒன்றிய பாஜக அரசு விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற பொருள்களுக்கு நியாய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே ஒன்றிய அரசு விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஆர். வேலாயுதம் தலைமையேற்றார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ. ஆதிநாராயணன் மாவட்ட துணை தலைவர் கே. பூபதி மாநில கரும்பு விவசாயிகள் சங்க துணை தலைவர் எஸ் நல்லாக் கவுண்டர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஏ .ஆர். முத்துசாமி மாவட்ட துணை தலைவர் ஜே. கிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர்கள் தங்க ரத்தினம் செம்மலர் சண்முகம் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் மொளசி பூபதி ஆகியோர் ஒன்றிய பாஜக அரசின் இந்தத் திட்டத்தால் விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து விளக்கி பேசினார்கள். நிறைவாக ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாநில செயலாளர் பி. பெருமாள் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியதமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள் கூறியதாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்க வேண்டும் என்பதை கொள்கை முடிவாக அறிவித்திருக்கிறார்கள் நீர் ஆதாரம் வீணாவதாகவும் அதனை மீதப்படுத்தி ஊராட்சி ஒன்றுக்கு நீராதாரமையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வடிவ சூடித்து நீரை மிச்சப்படுத்த இருப்பதாக கூறுகின்றனர்.கடந்த காலத்தை போல் மூன்று கருப்பு வேளாண்மை சட்டம் இயற்றி வேளாண்மை துறையை நசுக்கியது போல் புதிய சட்டத்தை இயக்கி தனியார் நிறுவனங்களுக்கு உலக வர்த்தக அமைப்பு போன்ற நிறுவனங்களுக்கு ஐரோப்பிய வேளாண்மை சந்தைக்கு விவசாய துறையை திறந்து விடும் நோக்கில்ஒன்றிய பாஜக அரசினர் செயல்படுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க துணை அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்த போது பால் கொள்முதல் நெல் கொள்முதல் வேளாண்மைபொருள்களுக்கான வரி உள்ளிட்டவற்றை குறைக்க வேண்டும் எனவும் வேளாண்மைத் துறையை அமெரிக்க வர்த்தகத்திற்கு திறந்து விட வேண்டும் என நிர்பந்தப்படுத்தி கையெழுத்து பெற்றுள்ளனர். மழைக்காலங்களில் உபரியாகவெளியேறும் நீர் கடலில் சென்று வீணாகுவதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்தியாவிலுள்ள மிக முக்கியமான நதிகளில் மழைக்காலங்களில் சுமார் 25 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது இதனை சேமித்து பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்தனியார் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேளாண்மை துறையை அடகு வைக்கும் முயற்சியாக தான் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது இதனை என் காரணத்தை கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.
Next Story

