தீரன் சின்னமலை நினைவு தினத்தை சிறப்பாக கொண்டாட கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள்

X
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு ஆடி 18 அன்று தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல் இந்த ஆண்டும் நமது சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு பிறப்பிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். அனைத்து பகுதிகளிலும் நாம் செய்த செயல் திட்டங்களை மக்களிடையே எடுத்து கூற வேண்டும், மேலும் அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதை அனைத்தையும் நம் நிர்வாகிகள் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.மேலும் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணிக்கு துணை செயலாளர்களாக தினேஷ்குமார், ஜெயக்குமார்,கார்த்தி உள்ளிட்டவர்களும், கிழக்கு ஒன்றியத்திற்கு செல்வகுமார் அவர்களை ஒன்றிய இணைச் செயலாளராகவும், தீரன் தொழிற்சங்க பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ் ஆகியோரை நியமிக்க உத்தரவிட்டார். செயற்குழுக் கூட்டத்தில் தீரன் தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் கொங்கு கோமகன், தீரன் தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் குரு இளங்கோ, கொமதேக மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, இணை செயலாளர் லாவண்யா ரவி, மயில் ஈஸ்வரன், நகர செயலாளர்கள் சேன்யோ குமார், ஆஞ்சநேய அசோக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story

