குழந்தை தொழிலாளர் இல்லாத சிவகங்கை மாவட்டம்

X
சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சதீஸ்குமார் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினரால் (District Task Force) மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் (Shops & (Shops & Establishments) குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டத்தின்கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டாய்வில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை. 14 வயதிற்கு மேல், 18 வயதிற்குட்பட்ட 5 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் அபாயகரமற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவது கண்டறியப்பட்டு, அவர்கள் உயர்நிலைக் கல்வி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வளரிளம் பருவத்தினரை பணிக்கமர்த்திய கடை நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டத்தின் கீழ் குற்ற இசைவுத்தீர்வு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

