வாடிப்பட்டியில் ஓய்வூதியர்கள் சங்க மாநாடு

வாடிப்பட்டியில் ஓய்வூதியர்கள் சங்க மாநாடு
X
மதுரை வாடிப்பட்டியில் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 5வது மாநாடு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு :- அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்க வேண்டும். வாடிப்பட்டி வட்டத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். வாடிப்பட்டி அலங்கா நல்லூர் பகுதியில் மா கொய்யா பழங்களுக்கு குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும். வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை உயிர் காக்கும் பல்நோக்கு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டு ம். முதியோருக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story