பட்டுக்கோட்டை அருகே நெல்கொள்முதல் நிலைய கட்டடம் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் கழுகுப்புலிக்காடு ஊராட்சி, பில்லங்குழி கிராமத்தில், வேளாண்மை விற்பனை கூடத்தின் மூலம் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு உலர் களம், தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய நெல் கொள்முதல் நிலைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வீர.சரவணன், கிளைக் கழக செயலாளர், ஊராட்சி கழகச் செயலாளர், கட்சியினர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




