பலாப்பழங்களை ருசிக்கவும் தென்னை வாழை பாக்கு மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

பலாப்பழங்களை ருசிக்கவும் தென்னை வாழை பாக்கு மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகிறது.
X
பொதுமக்கள் அச்சம்
கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் இரவு பகல் நேரங்களில் பலாப்பழங்களை ருசிக்கவும் தென்னை வாழை பாக்கு மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு பகல் நாட்களாக கூடலூர் அருகே உள்ள மாக்குமூலம் புத்தூர் வயல் செல்லும் சாலையில் உள்ள அருகில் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஒற்றைக் காட்டு யானை இரவு நேரங்களில் உணவு தேடி உலா வருகிறது இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். நேற்று இரவு வீட்டின் முன்பு உலா வந்த காட்டு யானை அங்கிருந்த தாவரங்களை சாப்பிட்டது இதனால் அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள். எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவரும் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்வன பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story