மாணவ மாணவியர்களுக்கு மர கன்று வழங்கல்

மாணவ மாணவியர்களுக்கு மர கன்று வழங்கல்
X
அகஸ்தீஸ்வரம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் துறை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்வுக்கு வணிகவியல் துறை தலைவர் முனைவர் .ஆர்.தர்மரஜினி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் டி.சி. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துறை பேராசிரியர்கள் ராஜபிரியா, முருக பூபதி ,ஜெயபிரபா, ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் தேக்கு மரக்கன்றுகள் ,வாழ்த்து அட்டை மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். மாணவர்களிடையே ஒற்றுமையையும், இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும், இளைஞர் மேம்பாட்டையும் வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Next Story