விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்

X
குமரி மாவட்டம் மார்த்தாண்டம், லீபுரம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் மகன் அந்தோணி பிரபாகிஷன் (21) சட்டக் கல்லூரி 4 ம் ஆண்டு மாணவர் . நேற்று இவர் பைக்கில் மார்த்தாண்ட நோக்கி சென்று கொண்டிருந்தார். வெட்டுமணி பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு ஸ்கூட்டி மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகிஷன் குழித்துறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்கூட்டி வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சித்தா டாக்டர் அஜின் ஜான்ஸ் ( 23) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

