ஆலங்குளம், கீழப்பாவூரில் இன்று மின்தடை

ஆலங்குளம், கீழப்பாவூரில் இன்று மின்தடை
X
ஆலங்குளம், கீழப்பாவூரில் இன்று மின்தடை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story