கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

X
சங்கராபுரம் அடுத்த பொய்க்குணம் குன்றுமேடு அருகே உள்ள தரை கிணற்றில் நேற்று காலை பெண் மயில் தவறி விழுந்து சத்தமிட்டது. இதை பார்த்த தன்னார்வலர் சுதாகரன், கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டார்.மயிலுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். பின்பு, வனத்துறை அலுவலர்களிடம் மயிலை ஒப்படைத்தார்.
Next Story

