வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

X
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே குருவம்பட்டி பகுதியில் கடந்த மாதம் சிறுகம்பூரை சேர்ந்த அன்பழகனிடம் வழிப்பறி செய்த வழக்கில் சுனைபுகநல்லூரை சேர்ந்த சரித்திரபதிவேடு குற்றவாளி வடிவேல் (வயது 31) என்பவர் வாத்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வடிவேல் தொடர் குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் வடிவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

