பர்னிச்சர் கடையில் குரங்கு புகுந்து அட்டகாசம்

பர்னிச்சர் கடையில் குரங்கு புகுந்து  அட்டகாசம்
X
ஈரோட்டில் இன்றுபர்னிச்சர் கடையில் குரங்கு புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதால் பரபரப்புஅடர்ந்த வனப்பகுதியில் விட கோரிக்கை
ஈரோடு பூந்துறை சாலையில் செந்தாமரை கண்ணன் என்பவர் கடந்த 10 வருடமாக கண்ணன் பர்னிச்சர் என்ற பெயரில் சொந்தமாக கட்டில் ,பீரோ ,சோபா, ஆகியவற்றை தயாரித்து கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இவரது கடை செயல்பட்டு வரும் பகுதியில் சமீப காலமாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் இன்று செந்தாமரை கண்ணனின் கடைக்குள் புகுந்த குரங்கு கடையின் மேற்கூரை சேதப்படுத்தியது மட்டும் இல்லாமல் கடையில் இருந்த பர்னிச்சர்களையும் சேதப்படுத்தியது.இதில் கடையில் சுமார் 50,000 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளது .இது குறித்து வனத்துரையினருக்கும் ,தீ அணைப்பு துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. பொருட்கள் சேதம் அடைந்ததால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.குரங்குகளின் தொடர் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story