வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
X
பண்ணாரி அருகே நெடுஞ்சாலை ஓரம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டெருமைகளை போட்டி போட்டு செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகள் வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை அதிகளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானை, சிறுத்தை, தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கூட்டமாக காட்டெருமைகள் சுற்றித்திரிந்தன. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்களது வாகனங்களை நிறுத்தி ஆர்வம் மிகுதியால் தங்களது செல்போனில் காட்டெருமைகள் கூட்டத்தை செல்பி எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டெருமை மிகவும் ஆபத்தான விலங்காகும். கூட்டமாக செல்லும் காட்டெருமைகளை வாகன ஓட்டிகள் எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது. சில வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால் காட்டெருமைகளை தங்களது செல்போனில் படம் எடுத்து வருகின்றனர். இது ஆபத்தான செயலாகும். சட்டப்படி திருக்குற்றமும் ஆகும். காட்டெருமைகளை செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story