ஒன்பதடி பாம்பால் பரபரப்பு

X
ஈரோடு கார்மல் பள்ளி அருகே குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர். சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வீடு தோட்டத்தில் பழைய இரும்பு பைப்புகள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களாக இவர் வீட்டில் வளர்த்து வரும் நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் ஒருவர் தோட்டத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த தவளையை பாம்பு ஒன்று கடிக்க முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விக்னேஸ்வரிடம் கூறினார். இதை எடுத்து அவர் பாம்பு பிடி வீரர் யுவராஜிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். யுவராஜா சம்பவம் இடத்திற்கு வந்து சோதனையிட்டார். அப்போது வீட்டின் தோட்டத்து பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிள் அடியில் பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர் லாபகரமாக அந்த பாம்பை பிடித்தார். பிடிப்பட்ட பாம்பு 9 அடி நீளமுள்ள மஞ்சள் சாலை பாம்பு என தெரிய வந்தது. இதை எடுத்து யுவராஜ் பாம்பை பிடித்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுபடி அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்
Next Story

