ஆவின் பூத்தில் திருட்டு

X
ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு, முத்தம்பாளையம் ஹவுஸிங் யூனிட் அருகே ஆவின் பூத் செயல்பட்டு வருகிறது. ரயில்வே ஓய்வு பெற்றவர்கள் அசோசியேசன் சார்பாக இந்த ஆவின் பூத் நடத்தப்பட்டு வருகிறது. அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பொறுப்பேற்று நடத்தி வந்தார். இந்த ஆவின் பூத் இரும்பு செட்டால் ஆனது. நேற்று இரவு 8 மணி அளவில் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் மாரிமுத்து ஆவின் பூத்தை பூட்டி சென்று விட்டார். பின்னர் இன்று காலை மீண்டும் ஆவின் பூத்தை திறக்க மாரிமுத்து வந்தார். ஆவின் பூத்தை திறந்து உள்ளே சென்றபோது கள்ளப் பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரத்து 500 மாயமாகி இருப்பதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். மேலும் பையில் இருந்த இரண்டு கிலோ சர்க்கரை மிக்சர் சாக்லேட்டைகள் போன்றவையும் மாயமாய் இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நேற்று நள்ளிரவு கடையின் இடது பக்க வழியாக இரும்பு ராடை பயன்படுத்தி நெம்பி உள்ளே புகுந்த மர்ம நபர் கள்ள பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் தின்பண்டத்தையும் சாப்பிட்டு சென்று உள்ளார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதை ஆவின் பூத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் பணம் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
Next Story

