கோவை: புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா

கோவை இருகூர் எல்என்டி பைபாஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.
கோவை இருகூர் எல்என்டி பைபாஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி நேற்று திறந்து வைத்தார். மருத்துவர் ராஜேந்திரன் நிறுவியுள்ள இந்த புதிய மருத்துவமனை திறப்பு விழாவில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 150 படுக்கையுடன், நவீன சிகிச்சை வசதிகள் கொண்ட இவ்வாழ்வியல் மருத்துவமனை, கிராமப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இருதயவியல் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இம்மருத்துவமனையில் எலும்பு முறிவு, மூட்டு மாற்று, குடலியல் உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்படும். அரசு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து காப்பீட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன எனத் தெரிவித்தார் மருத்துவர் ராஜேந்திரன்.
Next Story