முன்னாள் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முன்னாள் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
X
முன்னாள் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் தெற்கு மற்றும் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 102 -ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் 4 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு உரையாற்றினார் . ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் K.R.C.J. ரத்தீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் H.T. மகேஷ் வரவேற்க குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்,ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை கழகப் பேச்சாளர் பா .ஸ்ரீலேகா சிறப்புரையாற்றினார். உடன் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கே.பி .ராஜன்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு D.பிரகாஷ், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன், ஒன்றிய அவைத் தலைவர், மாவட்ட பிரதிநிதி, ஒன்றிய துணை செயலாளர்,மாவட்ட கழக அணிகளின் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணைத் தலைவர்கள்,இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள்,ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வி. ஏ. தமிழ்ச்செல்வன்.நன்றி கூறினார்.
Next Story