காரிக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

X

பொன்னியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர் பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பொன்னியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story