சங்கரன்கோவில் அருகே ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியில் கனிமொழி பங்கேற்பு

X

ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியில் கனிமொழி பங்கேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னிகோனந்தல் பகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தோடு திமுக-வில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ராஜா தலைமையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான, கனிமொழி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணி ஸ்ரீ குமார், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், கிளை கழக பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story