சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற போலீஸ்காரர் கைது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகு நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோ குமார் வயது 29 தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அழகு நாச்சியாபுரம் பகுதி சேர்ந்த ஒரு பெண் அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது போலீஸ்காரர் மனோ குமார் எட்டிப்பார்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் சத்தம் கேட்கவே அங்கிருந்து போலீஸ்காரர் மனோ குமார் தப்பி சென்றார். இதுகுறித்து குருவிகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் மனோகுமாரை கைது செய்தனர்.
Next Story

