கருமத்தம்பட்டி நகராட்சியில் அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்!

X
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட சேடபாளையம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ வி.பி கந்தசாமியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து எம்எல்ஏ வி.பி கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். என்பது சேடபாளையம் பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தை சூலூர் எம்எல்ஏ வி.பி கந்தசாமி இன்று குழந்தைகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலாளர் கந்தவேல், குமரவேல், நகரச் செயலாளர் ஆதவன் பிரகாஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Next Story

