வருகிற ஆகஸ்ட் மாதம் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு

பக்தர்களின் வசதிக்காக வேளாங்கண்ணியில் ஆக்கிரப்பு அகற்றம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.பேராலயத்தில், வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் கலந்து கொள்வதற்காக வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில், பேரூராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலை துறையினர், வருவாய்த் துறையினர் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு எதிரில், பொது இடங்களை ஆக்கிரமித்து இருந்த மெழுகுவர்த்தி கடை, பழக்கடை, ஜூஸ் கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். மாதா கொடி ஊர்வலம் மற்றும் தேர் வரும் பகுதிகளான கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடிவடைந்ததும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலிருந்து, பேராலயம் வரை பளிச்சென்று கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.
Next Story