விஜய் அதிமுகவுடன் சேர்ந்தால் வாக்குகள் சீமானுக்கு செல்லும் - ஈ.ஆர். ஈஸ்வரன்

X

கோவை இருகூர் பகுதியில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனை விழாவில் கலந்து கொண்ட திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன், பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
கோவை இருகூர் பகுதியில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனை விழாவில் கலந்து கொண்ட திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன், பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதிமுகவுடன் நடிகர் விஜய் கூட்டணி அமைத்தாலும், அவர் தனித்து போட்டியிடவில்லை என்றால் அவரது வாக்குகள் நாம் தமிழர் கட்சி தலைவரான சீமானுக்கே செல்லும் என தெரிவித்துள்ளார். திருப்புவனம் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சில போலீசாரின் தவறுகளை ஒட்டுமொத்த காவல்துறைக்கு இழிவாக மாற்றக் கூடாது என்றும் கூறினார். இது தனி குடும்ப பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை என்றும் விளக்கினார். எல்என்டி பைபாஸ் சாலை விரிவாக்கத்திற்கு உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும், அதை நடைமுறைப்படுத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். வாக்குசந்தை பற்றி ஊடகங்களில் பேச தேவை இல்லை என்றும், நாங்கள் செய்த சாதனைகள் மூலமே மக்களின் ஆதரவை பெற முடியும் என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டியதும், கொங்கு மண்டலத்தை மட்டும் குறிவைக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Next Story