மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகரனின் மனைவி முருகேஸ்வரி(38) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை.3) வீட்டில் இருந்த மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் மயங்கி கிடந்த இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்த முருகேஸ்வரிக்கு தைராய்டு உட்பட பல நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

