கரூரில் பொய்யான தகவல்களை பரப்பி கல்வி நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க முயற்சி.கல்லூரி நிறுவனத் தலைவர் அபுல் ஹசேன் பேட்டி.

கரூரில் பொய்யான தகவல்களை பரப்பி கல்வி நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க முயற்சி.கல்லூரி நிறுவனத் தலைவர் அபுல் ஹசேன் பேட்டி.
கரூரில் பொய்யான தகவல்களை பரப்பி கல்வி நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க முயற்சி.கல்லூரி நிறுவனத் தலைவர் அபுல் ஹசேன் பேட்டி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் அருகே ஏ ஆர் எஸ் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நர்சிங் படிப்பு படித்த மாணவிகள் , நிறுவனம் முறையாக அனுமதி பெறாமல் இயங்குகிறது. அவர்கள் அளிக்கும் சான்றிதழ் செல்லாது என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் இந்த கல்வி நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது அந்த குற்றச்சாட்டு இல்லை என தெரியவந்தது. மாணவிகளின் குற்றச்சாட்டின் பின்னணியில் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பொறுப்பாளர் கல்வி நிறுவன தலைவரிடம் பணம் பறிக்கும் நோக்கோடு செயல்பட்டது தெரியவந்தது. அது குறித்து இன்று அபுல் ஹசேன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவும் எங்களிடம் பணத்தை பறிப்பதற்காகவும் இங்கு பணியாற்றிய அகிலாண்டேஸ்வரி என்பவரின் கணவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் இவ்வாறு செயல்பட்டார் என தெரிவித்தார்.
Next Story