மீண்டும் திருவிழா தேதி முடிவு

X
திண்டுக்கல் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வெள்ளைபொம்மன்பட்டியில் இரு சமூகத்திற்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு அங்குள்ள உள்ள அருள்மிகு பகவதி அம்மன் காளியம்மன் முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 13 வருடங்களாக நடத்தாமல் கடந்த 8 வருடங்களாக கோவில் திறந்து சாமி கும்பிடாமலும், திருவிழாவும் நடத்தாமல் இருந்ததை முன்னிட்டு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேடசந்தூர் வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர், துணை வட்டாட்சியர் சக்தி, வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் வேலுமணி ஆகியோர் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனைவரும் ஒரு தரப்பினராக இணைந்து அமைதியான முறையில் வழிபாடு நடத்துவது என்றும் ஊர் பொதுக்கூட்டம் நடத்தி கும்பாபிஷேகம் நடத்தி தேதி குறிப்பிடுவது உள்ளிட்டவற்றை ஒரு மனதாக முடிவு செய்தனர். பல வருடங்களாக சாமி கும்பிடாமல் இழுபறியாக இருந்து வந்த நிலையில் தற்போது சமூகமான முடிவு பெற்று இருப்பது ஊர் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நீதிமன்றம் உத்தரவின்படி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Next Story

