வாசுதேவநல்லூரில் கால்நடை மருந்தகம் திறப்பு

கால்நடை மருந்தகம் திறப்பு
தென்காசி மாவட்ட கால்நடை பாரமரிப்புத்துறையின் வாசுதேவநல்லூர் கால்நடை மருந்தகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் நேற்று கால்நடை மருந்தகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story