வாலாஜாபாத்தில் சாலை விபத்தில் முதியவர் பலி

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், கருக்குப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மணி 70. இவர், வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் காஞ்சிபுரம் நோக்கி தன் உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். ஏகானாம்பேட்டை சாலையில் முன்னாள் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் அப்பகுதியில் உள்ள பிரிவு சாலைக்கு செல்ல முயன்றபோது மணி சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மணியை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

