குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய மாவட்ட கலெக்டர்

X

குமாரபாளையம் 2வயது குழந்தையின் சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு அட்டை தயார் செய்து கொடுத்த கலெக்டருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
குமாரபாளையம் கத்தாளைபேட்டை பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், பரிமளா தம்பதிகளின் 2வயது குழந்தை ஜோஸிதாவிற்கு, இரண்டு வயது ஆகியும் இன்னும் நடக்க முடிவதில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ செலவு மாதம் 10,000 ரூபாய்க்கும் மேல் செலவாகிறது. தனியார் மருத்துவமனையில் காப்பீடு அட்டை இருந்தால் சிகிச்சை செய்யலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டர் துர்க்காவை நேரில் சந்தித்து, காப்பீடு அட்டை வேண்டி மனு கொடுத்தார். சூழ்நிலை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் துர்கா, உடனே மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்க ஏற்பாடு செய்தார்., இதனால் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை நடந்து வருகிறது. சூழ்நிலை அறிந்து உடனே மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுக்கொடுத்த மாவட்ட கலெக்டர் துர்காவிற்கு பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் நன்றி கூறினார்கள்.
Next Story