தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்மென என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல். -

தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்மென என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  தகவல். -
X
தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்மென என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல். -
சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாத்தூர் நிலையத்திற்கு நேரில் வந்து பயிற்சியில் சேர தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் இருபாலரும் (ஆண் / பெண்) 31.07.2025 முடிய விண்ணப்பம் செய்யலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். ஏற்கனவே B.SC., Diploma, B.E., கல்வியில் சேர்ந்து கல்வியினை தொடர இயலாதவர்களும் திருமணமானவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளின் விபரம் பொறிப்பகுதி பொருத்துநர் (FITTER) மின்சார பணியாளர் (ELECTRICIAN) கம்மியர் மோட்டார் வண்டி (MMV) சூரிய மின்சக்தி தொழில்நுட்பவியலாளர் (எலக்ட்ரிக்கல்)(SOLAR TECHNICIAN (ELECTRICAL) மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (FIRE TECHNOLOGY & INDUSTRIAL SAFETY MANAGEMENT) மற்றும் Tata Technology மூலம் 4.0-வில் நவீன தொழிற் நுட்பங்களுடன் கூடிய தொழிற் பிரிவுகளின் விபரம் (Advanced CNC Machining Technician), (Industrial Robotics & Digital Manufacturing) ( Manufacturing Process control & Automation ) இப்பிரிவுகளில் சேருவதற்கு 10-ம் வகுப்புதேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற் பயிற்சி நிலயங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்துபயணச் சலுகை /அனைவருக்கும் மாதாந்திர கல்விஉதவித் தொகைரூ.750/- (வருகைக்குஏற்ப) /சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) /மூடு காலணி 1 செட் /பாடப்புத்தகங்கள் /வரைபடகருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை / அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண்/ பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- கூடுதல் உதவித்தொகை. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர் நிலையத்தில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ் / பள்ளிமாற்றுச் சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம். நேரடி சேர்க்கைக்கு கடைசி தேதி 31.07.2025 என தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் சாத்தூர் 4562-290953, 94990-55823, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story