ஆனி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

X
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி ஸ்ரீ பெரியநாயகி சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் ஆனி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் பெரியநாயகி சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பூ பல்லாக்கில் எழுந்தருள செய்யப்பட்டு திருவீதி புறப்பாடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஜூலை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது
Next Story

