காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
X
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. இந்திய அரசியலமைப்பை காப்போம் என்ற தலைப்பில், குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செல்வகுமார், சிறப்பு பேச்சாளர் குமரி மகாதேவன் பங்கேற்று பேசினர். குமரி மகா தேவன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பை காப்போம் எனும் தலைப்பில் பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவித்தது டிரம்ப் என்றால், இந்திய பிரதமர் யார்? வரும் காலத்தில் நம் சந்ததிகளுக்கு இந்திய அரசியல் அமைப்பை விட்டு செல்வது முக்கியம். அதனால் நாம் அதனை காப்போம். இவ்வாறு அவர் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story