அதிமுக தெருமுனைப் பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

அதிமுக தெருமுனைப் பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
X
அதிமுக தெருமுனைப் பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டஅதிமுக அம்மா பேரவைமற்றும் திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் 21 வது வார நிகழ்வாக சித்தாளந்தூர் ஊராட்சியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகள் நான்காண்டு கால திமுக ஆட்சியின் அவலங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக தெருமுனைப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், மாநில அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர்மோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சரோஜா,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பரணிதரன், பட்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தின் இறுதியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது கடைக்கோடி தொண்டனாக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்திருக்கிற அண்ணன் எடப்பாடி ஆட்சியிலும் அம்மாவின் ஆட்சியிலும் இருந்த சிறப்பான திட்டங்களை நிறுத்தியது தான் கடந்த நாலரை ஆண்டு அவல ஆட்சியின் செயலாக உள்ளது. இதுகுறித்து மக்களிடம் எடுத்துக் கூற 52 வாரங்கள் தெருமுனைப் பிரச்சாரம்செய்ய வேண்டும் என்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவுறுத்தலுக்கு இணங்க 21வது வார நிகழ்வாக திமுக ஆட்சி அவலங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குசீர்கெட்டு உள்ளதுஎன்பதற்கு சிவகங்கை காவல் நிலையத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமே சாட்சியாக உள்ளது இந்த ஆட்சி மீண்டும் தொடருமானால் பொதுமக்கள் ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தினோடு வாழ வேண்டி வரும். தினமும் 5 கொலை 10 கொலை நடக்கிற அளவுக்கு கொலைகார மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது கொலை செய்பவர்கள் ஆட்சியாளர்களை கண்டு அச்சப்படுவதில்லை. போதைப்பொருள் கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது குற்றங்கள் மலிந்து போய் உள்ளது ஏதோ எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக குற்றம் சொல்லவில்லை இளைஞர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் எதிர்காலம் வீணாக போய்விடுமே என்பதற்காக சொல்லுகிறோம் இந்த ஆட்சியில் கஞ்சா பழக்கம் போதைப்பொருள் லாட்டரி விற்பனைஅமோகமாக நடந்து வருகிறது பாதுகாக்க வேண்டிய காவலர்ளே ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினரின் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வராமலே புகார் பதிவு செய்யாமலே அடித்துக் கொள்ளும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நம்மை வீடு புகுந்து தாக்கும் நிலை உருவாகும். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலம் என தமிழ்நாடு மாறி உள்ளது. இதற்கு வட்டி மட்டும் 75 ஆயிரம் கோடி கட்டுகிறார்கள் அதற்கான சுமைகளை வீட்டு வரியாக சொத்து வரியாக பத்திரப்பதிவு கட்டணமாக நம்மிடம் தான் வசூலிக்கிறார்கள் இந்த நிலை எல்லாம் மாறி நல்ல ஆட்சி நடக்க 2026 ஆம் ஆண்டு நடக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மீண்டும் எடப்பாடியார்ஆட்சி மலரநீங்கள் ஒரு முகமாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.
Next Story