ஜெயங்கொண்டத்தில் டூவீலர் மெக்கானிக் மனைவி தூக்கிட்டு தற்கொலை நள்ளிரவில் துயரம் கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.*

X
அரியலூர், ஜூலை.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ரமேஷ்(37) என்பவர் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டை சேர்ந்த பஷீர்அகமது என்பவரின் மகள் ஷபிராபேகம் (35) என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும்,12 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கணவர் டூவிலர் மெக்கானிக்கான ரமேஷ் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் வழக்கமாக ஷபீராபேகம் நேற்று முன்தினம் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மீண்டும் பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் தனது பிள்ளைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் ஷபிரா பேகம் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷபிராபேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் நள்ளிரவில் பெண் தூக்கிட்ட நிலையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து சபீராபேகத்தின் தந்தை பஷீர் அகமது ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி அளித்த புகாரின் பேரில் சபீரா பேகத்தின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
Next Story

