ஜெயங்கொண்டம் அருகே டிராக்டர் மோதி டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியர் பலி.

ஜெயங்கொண்டம் அருகே டிராக்டர் மோதி டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியர் பலி.
X
ஜெயங்கொண்டம் அருகே டிராக்டர் மோதி டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர், ஜூலை.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சத்திரம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வதுரை. இவரது மகன் செந்தமிழ்ச்செல்வன் (23) டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலையில் இருந்தவர் தற்போது உள்ளூரில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பூச்செடி வியாபாரம் செய்து வந்தார்.இந்நிலையில் சத்திரம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி செல்வதற்காக பிச்சனூர் வழியாக மான்ட்ரேரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது  மண் ஏற்றி வந்த டிராக்டர் செந்தமிழ்ச்செல்வனின் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் செந்தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வெட்டியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரான வேலுசாமி மகன் விவேக் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.23 வயதான இளைஞர் டிராக்டர் மோதி இறந்த சம்பவம் குடும்பத்தினரிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story