அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!
X
கீழ்வல்லம் பகுதியில் கனிம வளத்துறை அதிகாரி பிரவீன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் பகுதியில் கனிம வளத்துறை அதிகாரி பிரவீன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்திய போது ,அதிகாரிகளை பார்த்ததும் டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து லாரியை சோதனை செய்தபோது அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்தது தெரிந்தது. இதனையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
Next Story