வாலிபரின் பைக் திருட்டு- போலீஸ் விசாரணை!

வாலிபரின் பைக் திருட்டு- போலீஸ் விசாரணை!
X
வாலிபரின் பைக் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (30). இவர் தனது வீட்டின் எதிரே பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதையடுத்து பிரசாந்த் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக்கை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Next Story