தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண்,மொழி,மானம் காக்க ஓரணியில்_தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை போக்குவரத்து துறை அமைச்சர் பங்கேற்பு

X

தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண்,மொழி,மானம் காக்க ஓரணியில்_தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
அரியலூர், ஜூலை.5- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில்,தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க கழகத்தலைவர் முதலமைச்சர் தொடங்கி வைத்த ஓரணியில்_தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில்,செய்ய வேண்டிய பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மேலிட பார்வையாளர்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகேசன், அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர் அ.இராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் இரா.சங்கர், கே.எஸ்.ஆர்.கார்த்திக்கேயன், ந.கார்த்திகைகுமரன்,த.சம்பந்தம்,த.குணசீலன்,அ.தங்கபிரகாசம், முனைவர் மு.முருகானந்தம்,க.நளராசன், மருத்துவர் மா.சங்கர், எழிலரசி அர்ச்சுனன், நீல.மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story