சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

X

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அரியலூர், ஜூலை 5- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். உடையார்பாளையம் அருகேயுள்ள வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி மகன் தமிழ்ச்செல்வன்((34). இவர், 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை அண்மையில் கைது கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து, தமிழ்ச்செல்வனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து, அவரை திருச்சி மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.
Next Story