கீழப்பழுவூர் அருகே கோழிப் பண்ணை கொட்டகையில் தீவிபத்து

X
அரியலூர்,ஜூலை 5- அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வல்லகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார்(40). அப்பகுதியிலுள்ள தனது வயலில், கோழிப் பண்ணை வைத்துள்ளார். சனிக்கிழமை இவரது கோழிப்பண்ணையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது. இதனால் கொட்டகை முழவதும் எரியத் தொடங்கியது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணை அணைத்தனர். ஆனால் கொட்டகை முற்றிலும் எரிந்ததால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story

