செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

X

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சார்பில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் வகையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவர் திருமலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story